இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் கோவையில் ஜூன் 1, 2 ஆகிய தேதிகளில் மாநில செயற்குழு உறுப்பினர் கே. தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராஜன், டி.கே. ரங்கராஜன், உ.வாசுகி, அ.சவுந்தரராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:
மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வரும் பண மதிப்பு நீக்க நடவடிக்கை, உதய் திட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்ற பெயரில் பொதுவிநியோக முறையை சீர்குலைக்கும் நடவடிக்கை, சேலம் உருக்காலை உள்ளிட்டு பல பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவு, தேச பொருளாதாரத்தையும், அனைத்துப் பகுதி மக்களது வாழ்வாதாரத்தை பாதித்துள்ளது.
ஜி.எஸ்.டி. சட்டத்தை பயன்படுத்தி சில பொருட்களுக்கு ஏற்கனவே 14 சதவிகிதமாக இருந்த வரியை 28 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. இதனை எதிர்த்து வணிகர்களும், மருந்து கடை வியாபாரிகளும் கடையடைப்பு போராட்டம் நடத்தியுள்ளார்கள்.
விவசாய விளைப் பொருட்களுக்கு அடக்க விiயுடன் 50 சதமானம் உயர்த்தி விலைகொடுப்போம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஆட்சிக்கு வந்த பிறகு வாக்குறுதியை நடைமுறைப்படுத்த முடியாது என்று கூறிவிட்டது. கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கான ஒதுக்கீடுகளை வெட்டிக் குறைத்துள்ளது.
மத்திய பாஜக அரசு - சங்பரிவார் அமைப்புகளின் வகுப்புவாத நடவடிக்கை நாடு முழுவதும் சிறுபான்மை மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. தலித் மக்கள் மீது பல மாநிலங்களில் சங்பரிவார் அமைப்புகள் தாக்குதல் தொடுக்கின்றனர். இறைச்சிக்காக பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளை சந்தைகளில் விற்பதற்கும், வாங்குவதற்கும் தடை விதித்துள்ளது. இது மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என்பதோடு விவசாயிகளையும், கிராமப்புற பொருளாதாரத்தையும் கடுமையாக பாதிக்கிறது. இடதுசாரிகள் ஆளும் கேரளா, திரிபுரா மாநில அரசுகள் இதனை ஏற்க மாட்டோம் என்று அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மோடி அரசின் மூன்றாண்டு கால ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வியை சந்தித்துள்ள அரசியல் பின்னணியில் இந்தத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவை ஆட்சேபித்த காரணத்திற்காக சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் சூரஜ் என்ற மாணவர் சங்பரிவார் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுக, சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுதலை செய்க தமிழகத்தின் பல பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களும் குறிப்பாக பெண்கள் திரண்டு வலுமிக்க போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இளைஞர்கள், மாணவர்கள் உட்பட குடிப்பழக்கத்திற்கு ஆளாகி பல லட்சம் குடும்பங்கள் சொல்லொணா துயரத்தில் சிக்கித் தவிக்கின்றன. குடிப்பழக்கத்துக்கு ஆளான குடும்பத் தலைவர்கள் இளம் வயதிலேயே மரணம் அடைவதால் ஒவ்வொரு கிராமத்திலும் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குடும்ப பொருளாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது. குடிப்பழக்கம் மோசமான கலாச்சார சீர்கேடுகளை உருவாக்கி பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றன.
சமூக சீர்கேடுகளுக்கு முக்கிய காரணமாக உள்ள குடிப்பழக்கத்தால் பாதிப்புக்குள்ளானவர்கள் தன்னெழுச்சியாக திரண்டு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த தேர்தலின் போது அதிமுக தேர்தல் அறிக்கையில் படிப்படியாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலாக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். ஆனால் அதற்கு நேர்மாறாக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த கடைகளை கிராமங்களிலும் நகரங்களிலும் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் திறப்பதிலேயே அரசு குறியாக உள்ளது.
இந்நிலையில் இக்கடைகளை மூட வேண்டுமென போராடும் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் போராடிய மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்படுகின்றனர். இவர்கள் மீது பொதுச் சொத்துக்கு சேதம் என்ற சட்டப்பிரிவு சேர்க்கப்பட்டுள்ளதால் பலர் சிறையிலேயே தொடர்ந்து வாடும் நிலை உள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் சிங்காநல்லூர், சரவணம்பட்டி, கணபதி ஆகிய இடங்களில் போராடியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று மாநிலத்தின் பல பகுதிகளில் பொதுமக்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எனவே டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி போராடிய மக்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்களை உடனடியாக வாபஸ் பெறுவதுடன், சிறையிலடைக்கப்பட்ட அனைவரையும் உடன் விடுதலை செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
மேலும் மக்களின் எழுச்சிக்கு மதிப்பளித்தும், சட்டமன்றத்தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படியும், தமிழக அரசு படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.