மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசை கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் கைது

மாட்டிறைச்சிக்கு தடை விதித்த மத்திய அரசைக் கண்டித்து கோவையில் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.



மாடுகளை இறைச்சிக்காக விற்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. மத்திய அரசின் இந்த தடை உத்திரவிற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இந்நிலையில் மாட்டிறைச்சியை தடை செய்யும் மத்திய அரசின் முடிவை கண்டித்து கோவையில் மனித நேய ஜனநாயக கட்சியினர் ஊர்வலமாக நடந்து வந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர்.



அப்போது பிரதமர் மோடியின் உருவ பொம்மையினை அவர்கள் எரிக்க முயன்ற போது காவல் துறையினர் அவர்களிடம் இருந்து அதை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து தடுப்புகளை மீறி ரயில் நிலைய வளாகத்திற்குள் செல்ல முயன்ற மனித நேய ஜனநாயக கட்சியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.



இதனைத்தொடர்ந்து, காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் ரயில் நிலைய வளாகம் முன்பாக பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதனையடுத்து ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய ஜனநாயக கட்சியினர் 200-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வில் 95.20 சதவீதம் தேர்ச்சி ; ஈரோடு மாவட்டம் முதலிடம்!

மாநிலத்தில் 3,412 தேர்வு மையங்களில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை தேர்வுகள் நடைபெற்றன. இதில் ஈரோடு மாவட்டம் 98.8 சதவீத தே...

பிளஸ் 2 முடிவுகள் வெளியீடு : கோவை கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை பணிகள் களைகட்டியது

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான மகிழ்ச்சியிலும், உயர்கல்வி கனவுகளுடனும் மாணவர்கள் உற்சாகமாக கோவையின் பல்வேறு கல்லூரிகளி...

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...