மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது- சிபிஐஎம் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத்

மாடு விற்பனை தொடர்பான மத்திய அரசின் சட்டம் ஜனநாயகத்திற்கு விரோதமானது எனவும் இது மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் செயல் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்று வரும் அக்கட்சியின் மாநிலக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் முன்னதாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், "இந்தியாவின் ஒட்டுமொத்த பணவீக்கம் உயர்ந்துள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை பொருளாதாரத்தின் மீது நீண்ட கால தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னதாகவே கூறப்பட்டிருந்தது. அதனை இனி வரும் காலங்களில் மக்கள் உணர்ந்து கொள்வார்கள்.

தற்போது மாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள விற்பனை உள்ளிட்ட மத்திய அரசின் அறிவிப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது. மத்திய அரசின் இந்த நிலைப்பாட்டை முற்றிலும் பின்வாங்கச் செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்கும்.

அனைத்து கட்சிகளையும் அழைத்து குடியரசு தலைவர் வேட்பாளர் குறித்து ஆலோசனை செய்ய வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் முடிவை பொறுத்து தங்களின் முடிவை அறிவிக்க உள்ளோம். மாநிலக் குழு கூட்டத்தில் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்கப்படும். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளது" இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...