கோவை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறை தீர் கூட்டம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் சுமார் 80 பேர் கலந்துகொண்டனர்.
மாவட்ட வருவாய் அலுவலர் துரை இரவிச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூறைதீர் கூட்டத்தில், சென்னை ஓய்வூதிய இணை இயக்குநர் ஏ.புஸ்பாபாய் மற்றும் துணை இயக்குநர் கே.மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) த.சீ.சேஷாத்ரி, மாவட்ட கருவூல அலுவலர் டி.சி.எல்.நடராஜன், உதவி கருவூல அலுவலர் எஸ்.ராமர் மற்றும் பிற துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்குறைதீர் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் ஓய்வூதியர்களின் குறைகள் தொடர்பாக 48 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அதில் 33 விண்ணப்பங்களுக்கு பல்வேறு அரசு துறை அலுவலர்களிடமிருந்து பதில் பெறப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. 15 விண்ணப்பங்கள் தொடர்பாக துரித நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
குடும்ப நல நிதி 50 ஆயிரம் ரூபாய் வீதம் இரு பயனாளிகளுக்கு ஒட்டு மொத்த தொகையாக 10 ஆயிரம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகளை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ஓய்வூதியர்களுக்கு வழங்கினார்.