டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம் வடபுதூர் மற்றும் பொட்டையாபண்டிபுரம்பு ஆகிய கிராமத்து பகுதி மக்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது:-கிணத்துக்கடவு வட்டம், வடபுதூர் கிராமம், கிணத்துக்கடவில் இருந்து சொக்கனூர் மற்றும் சங்கராயபுரம், முத்துக்கவுண்டனூர் செல்லும் சாலை வழி சந்திப்பில் கல்லுக்குழி பேருந்து நிறுத்தம் அருகே ரத்தினசாமி என்பவருக்கு பாத்தியப்பட்ட நிலத்தில் 322 என்னும் எண் கொண்ட மதுபானக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.



இப்பகுதி, விவசாய நிலம் மற்றம் குடியிருப்புகள் நிறைந்த பகுதியாகும். இந்த டாஸ்மாக் கடையினை கடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள், பெண்கள், அருகில் உள்ள விவசாயிகள் செல்ல வேண்டும். டாஸ்மாக் கடை அமையும் பட்சத்தில் இப்பகுதி பொதுமக்களுக்கு மதுகுடிக்க வருவோரால் இடையூறுகள் ஏற்படும்.

எனவே, மேற்குறிப்பிட்ட இடத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...