ஜி.எஸ்.டி சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த கோரிக்கை மனுவை கோவை தொழில் அமைப்பினர் குழு வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி தமிழக முதலமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், ஜி.எஸ்.டி சட்டம் தொடர்பாக பல்வேறு தொழில்துறையினர், சிறு, குறு தொழில் அமைப்புகள், ஹோட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக குடியிருப்போர் நல சங்க பிரதிநிதிகளுடனும் அலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், "ஜி.எஸ்.டி சட்டத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கோவை மாவட்டத்தில் உள்ள கொடீசியா, சீமா, சைமா, சிஸ்மா, டேக்ட் போன்ற 54 தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு அவர்களின் கோரிக்கைகள் கேட்கப்பட்டது. மேலும் இக்கோரிக்கை தொடர்பாக 10 பேர் கொண்ட தொழில் அமைப்பு பிரதிநிதிகள் குழு வருகின்ற ஜூன் 1 ஆம் தேதி நிதி அமைச்சரையும், 2-ம் தேதி முதலமைச்சரையும் நேரில் சந்தித்து கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.
தொழில் அமைப்புகள் குழுவினருடன் தானும் முதலமைச்சரை சந்திக்க உள்ளேன். ஜி.எஸ்.டி மட்டுமின்றி கோவை மாவட்டத்திற்கு தேவையான மேம்பாட்டு பணிகள் குறித்தும் முதலமைச்சரிடம் தெரிவிக்க உள்ளேன்.
கோவை விமானநிலையம் விரிவாக்கம் தொடர்பாக நில உரிமையாளர்களின் நியாமன கோரிக்கைகளும் கேட்கப்பட்டது, அதனை பரிசீலித்து நிறைவேற்றிய பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கோவை மாவட்டத்தின்முக்கிய அணையான சிறுவாணி அணையை தூருவாருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதற்காக தமிழக அரசும் ஈஷா யோகா மையமும் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. சிறுவாணி தூர்வாருவது தொடர்பாக கேரள அரசிடமும் பேச்சு வார்த்தை நடைபெறும்.
ஜி.எஸ்.டி தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவில்லை என வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் குற்றச்சாட்டு தவறு" என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.
இதனைத்தொடர்ந்து, தமிழக அரசியல் கட்டமைப்பு சரியில்லை என்ற ரஜினி கருத்திற்கு, கமல்காஹசனும் வலியுறுத்தி உள்ளது என்ற பத்திரிகையாளர் கேள்விக்கு, மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் அரசும் சட்ட ஒழுங்கும் சரியாக உள்ளது. விமர்சனம் செய்யும் நடிகர்களுக்கும் இங்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.