கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றுலா வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி, 20 பேர் படுகாயம்


நீலகிரி மாவட்டம், உதகைக்கு கோடை விடுமுறையினை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் அன்றாடம் வந்து செல்கின்றனர். 



இந்நிலையில் வேலூரைச் சேர்ந்தவர்கள் வேன் மூலம் உதகைக்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை முடித்துவிட்டு கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் அவர்கள் திரும்பி சென்றுகொண்டிருந்தனர். அப்போது தட்டபள்ளம் என்னும் பகுதியில் இவர்களது வாகனம் வந்துகொண்டிருந்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 20 பேர் கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...