டும், டும், டும்... திருப்பூர் டாஸ்மாக்குல இலவசமா சரக்கு குடுக்குறாங்கோ...!!

நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பல்லாயிரக் கணக்கான பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், புதிதாக டாஸ்மாக் கடையினை அமைப்பது மட்டுமல்லாமல் அங்கு குடிமகன்களுக்கு இலவசமாக மதுபானங்களையும் விநியோகித்து விளம்பரப்படுத்தி வருவது பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களை அதிர்ப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.



என்னங்க சொல்றிங்க, கூட விலை வெச்சு விக்குற கடையில இலவசமா சரக்கு கொடுக்குறானுங்களா ? என்று பலரது மனதிலும் கேள்விகள் எழுந்திருக்கலாம். ஆம், அவ்வாறான ஒரு சம்பவம் தற்போது திருப்பூர், கஞ்சம்பாளையம் பகுதியில் நடந்துள்ளது.

திருப்பூருக்கு உட்பட்ட கஞ்சம்பாளையம், ராதா நகரில், நேற்று புதிதாக டாஸ்மாக் மதுபானக் கடையினை டாஸ்மாக் நிர்வாகத்தினர் திறந்துள்ளனர். அப்பகுதியைச் சுற்றியுள்ள குடிமகன்களுக்கு இந்த கடை திறக்கப்பட்டது குறித்து தெரியாததால் மதியம் வரை கூட்டம் வரவில்லை. 

இதனைத்தொடர்ந்து, மதுபிரியர்களை ஈர்க்க நினைத்த அந்த டாஸ்மாக் கடை ஊழியர்கள் முதலில் கடைக்கு வந்த குடிமகன்களுக்கு இலவசமாக மதுபாட்டில்களை கொடுத்துள்ளனர். இந்த தகவல் ஊர்முழுக்க பரவ, அடுத்த சில மணி நேரத்தில் இந்த மதுக்கடையில் நூற்றுக் கணக்கான குடிமகன்கள் குவிந்தனர். இந்நிலையில், கூட்டம் அதிகமானதால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இலவசமாக மதுகொடுத்துவிட்டு பின்னர் நிறுத்திவிட்டதாக கூறப்படுகிறது.

தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள டாஸ்மாக் கடையினை அகற்றக் கோரி பொதுமக்கள், பெண்கள், அரசியல் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைத்தது மட்டுமின்றி இலவசமாக மதுபானம் விநியோகித்தது திருப்பூர் மக்களிடையே அரசு நிர்வாகத்தின் மீது அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, தகவலறிந்த அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, டாஸ்மாக் கடையை உடனடியாக மூடவேண்டும் என்று முழக்கமிட்டனர். 

இதைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரிகள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது உங்கள் கோரிக்கையை தெரிவியுங்கள் என்று காவல்துறையினர் கூறியதைத் தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி பெண் ஒருவர் கூறுகையில், பெண்களின் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு நிர்வாகம் அதனை அறுக்க ஆண்களுக்கு வீதிதோரும் இலவசமாக மது வழங்கி வருவது வேதனை அளிக்கிறது. உடனடியாக இந்த டாஸ்மா கடையினை அகற்ற வேண்டும்" என்றார்.

Newsletter

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...