குன்னூரில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் 125 வருட பழமையான மரம் முறிந்து வாகனங்கள் சேதம்


நீலகிரி, குன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒருமாதகாலமாக பலத்த காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுமார் 12.30 மணியளவில் பெய்த பலத்த மழையில் குன்னூர் பி.டபில்யூ. வளாகத்தில் இருந்த 125 வருட பழமையான மரம் முறிந்து டிடிகே சாலையில் இருந்த டிரண்ஸ் பார்மர் மீது விழுந்தது. மேலும், அவை அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் விழுந்ததால் வாகனங்கள் சேதமடைந்தன.



இதனிடையே, இன்று அதிகாலை குன்னூர்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காந்திபுரம் அருகே கேரளாவிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் கார் மீது பலத்த காற்றின் காரணமாக மரம் விழுந்ததால் பெண் உட்பட இருவர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருகில் இருந்தோர் காயமடைந்தோரை மீட்டு குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.





Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...