12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் கீழ் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் வட்டம் வளையான்குட்டை தோட்டம் ஊராட்சியில் வேளாண்மைப்பொறியியல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்;

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் விதி 110-ன் கீழ் வேளாண்பொறியியல் துறையின் மூலம் விவசாயிகள் பல்வேறு திட்டங்கள் பெற்று பயன்பெற வேண்டுமென்ற அடிப்படையில் மானியத்துடன் கூடிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்ப்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒரு மையம் செயல்படும் வகையில் முன்னோடி விவசாயி தேர்வு செய்யப்பட்டு அப்பகுதி விவசயிகளுக்கு எவ்வகையான உபகரணங்கள் வழங்கினால் அது விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என கண்டறியப்பட்டு அதன் படி இயந்திரத்தின் மொத்த மதிப்பு ரூ.25 இலட்சத்திலிருந்து பயனாளிக்கு ரூ.10 இலட்சம் மானியம் கிடைத்திடும் வகையில் தேவையான வேளாண் இயந்திரம் வழங்கப்படுகிறது. 

அந்த வேளாண் இயந்திரத்தின் மூலம் பயனாளி தங்கள் பயன்பாட்டிற்கு போக அப்பகுதியிலுள்ள விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருவார். இவ்வாறு வேளாண் பொறியியல் துறையின் மூலம் இப்பணியை மேற்கொள்ளும்பொழுது அனைத்து விவசாயிகளும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தங்கள் பகுதிகளில் விவசாய பணிகளை மேற்கொள்ள பேருதவியாக இருக்கின்றன.கடந்த ஆண்டு மட்டும் 12 ஊராட்சி ஒன்றியங்களிலும், 16 நபர்களுக்கு மானியத்திட்டத்தில் வேளாண் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் டிராக்டர், ரோட்டா வேட்டர், ஐந்து கொத்து கலப்பை, ஒன்பது கொத்து கலப்பை, சுழல் கலப்பை, தட்டு வெட்டும் கருவி முதலியவை அடங்கும். இதன் மூலம் அந்தந்த பகுதிக்கு தேவையான உபகரணங்களை பெற்று பயன்பெறுவதே ஆகும். 

கடந்த 5 ஆண்டுகளில் வேளாண்பொறியியல் துறையின் மூலம் 17 மையங்களில் ரூ.1.70 கோடி மானியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 189 விவசாயிகளுக்கு 55.90 கோடி மானியத்தில் பவர் வீடர், தட்டு வெட்டும் கருவி, ஸ்பிரேயர், பவர் டிரில்லர், ரோட்டாவேட்டர் ஆகிய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோல் வேளாண் பொறியியல் துறையின் மூலம் சூரிய ஒளி, மின் சக்தி மூலம் மோட்டார் இயங்கும் திட்டம், மின் சக்தி மூலம் உலர்த்தி அமைக்கும் திட்டம், தேசிய வளம் குன்றா வேளாண் திட்டம், ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கு மானியத்துடன் உபகரணங்கள் வழங்ப்படுவதுடன் மேலும்  பிரதான் மந்திரி கிரிஷி சின்சாயி யோஜனா திட்டம் துவக்கப்பட்டு நடுத்தர தடுப்பணைகள் அமைத்து பயன்பெறும் வகையில் இதுவரை ரூ.50 கோடி மதிப்பில் 10 தடுப்பணைகள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன்பெற்று வருகின்றன. மேலும் தங்கள் பகுதியில் வேளாண் உற்பத்தியை அதிகரித்திடும் விதமாக விவசாயிகள் வேளாண் பொறியியல் துறையின் மூலம் வழங்கப்படும் மானித்திட்டத்தினை சிறப்பாக பயன்படுத்தி பயன்பெற வேண்டுமென இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

Irugur Minor Murder Case: Adi Dravidar and Tribal Welfare Commission Issues Notice, Seeks Thorough Investigation

The Adi Dravidar and Tribal Welfare Commission has taken suo motu cognisance of the murder of a Class 7 student in Irugu...

நீலாம்பூரில் சடலமாக மீட்கப்பட்ட தொழிலாளி; கொலை வழக்கில் ஒருவர் சரண்

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் அருகே ரத்தக் காயங்களுடன் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில், நண்பர்களுடன் மது அருந்தி...

இருகூர் மாணவர் கொலை வழக்கு: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் நோட்டீஸ்..!

கோவை இருகூரில் 7-ம் வகுப்பு மாணவர் ரித்தீஷ், சக மாணவர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்க...

கோயம்புத்தூரில் மே 22-ல் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மே 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகா...

கோவையில் நீட் தேர்வுக்கு எதிராக இடதுசாரி மாணவர்-இளைஞர் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வு வினாத்தாள் கசிவை கண்டித்து, நீட் தேர்வை ரத்து செய்யவும், தேசிய தேர்வு முகமையை கலைக்கவும் வலியுறுத்தி கோவை ரய...

ஆனைமலை மாசாணியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை  ₹61.65 லட்சம்

ஆனைமலை அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயிலில் உண்டியல் கணக்கிடப்பட்டதில் ரூ.61.65 லட்சம் காணிக்கையாக கிடைத்ததுடன், தங்கம்...