சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை - அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி?


காவிரி பிரச்சினை குறித்து பேசியதற்காக  சத்யராஜ் நடித்த படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என அமைச்சர் எஸ்.பி வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் ஆட்சியை விமர்சனம் செய்யும் அளவிற்கு ரஜினி பேசியதற்கும்  கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி வேலுமணி  இதனை தெரிவித்தார். மேலும் இரு அணிகள் இணைப்பிற்கான குழுக்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது எனவும் இரட்டை இலை மீட்கவேண்டும் என்பதே தங்கள் லட்சியம் எனவும் கூறினார். காவிரி பிரச்சினையில் சத்யராஜ் படத்தை வெளியிடாமல் கர்நாடகாவில் தடுத்த போது ரஜினி ஏன் குரல் கொடுக்க வில்லை என கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய ஆட்சியை பற்றி விமர்சிக்கும் படி ரஜினி பேசுவது சரியல்ல எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

மேலும் தன்னை விமர்சனம் செய்தவர்களை பற்றி பாராட்டி பேசிய ரஜினி, ஆட்சியை விமர்சிக்கும் படி பேசி இருப்பதாகவும்  தமிழகத்தில் ஆட்சி சிறப்பாக நடைபெறுவதாகவும் குறிப்பிட்ட அவர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்களும், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் இங்கு நன்றாக இருப்பதற்கு சட்டம் ஓழுங்கு நன்றாக இருப்பதே காரணம் எனவும் நடிகர்கள் பேசும் போது பார்த்து பேச வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...