பத்தாம் வகுப்பு தேர்வில் கோவை மாநகராட்சி பள்ளிகளில் 92.71 சதவிகிதம் - மாநகராட்சி ஆணையர்


கோவை மாநகராட்சியில் உள்ள 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 2030 மாணவ, மாணவியர்களில் 1882 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று, 92.71 தேர்ச்சி சதவிகிம் பெற்றுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதில் கடந்த மார்ச் 2017-ல் நடைபெற்ற 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 2030 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதினர். தோவு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன.

இதில் 1882 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் 92.71 ஆகும். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.70, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 96.24. இது சென்ற ஆண்டு தேர்ச்சி சதவிகிதத்தைவிட 1.07 சதவீதம் அதிகமாகும்.

மேலும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி இராமலிங்கம் காலனி 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி உடையாம்பாளையம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி கோவில்மேடு 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி செல்வபுரம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி புலியகுளம் 100 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒப்பணக்கார வீதி 99.63 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அரங்கநாதபுரம் 98.53 தேர்ச்சி சதவிகிதமும் பெற்றுள்ளனர். 

அதேப்போன்று, மாநகராட்சி எஸ்.ஆர்.பி. அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97.90 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி அனுப்பர்பாளையம் 97.30 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இராமகிருஷ்ணாபுரம் 96.99 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி இர.ச.புரம் (மேற்கு) 96.93 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி செல்வபுரம் 96.43 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பாப்பநாயக்கன்பாளையம் 95.24 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பெண்கள் உயர்நிலைப்பள்ளி சித்தாபுதூர் 95 தேர்ச்சி சதவிகிதமும் பெற்றுள்ளனர்.

மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி, இர.ச.புரம் 93.94 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி 92.68 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, ஒக்கிலியர்காலனி 92.45 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பீளமேடு 90.48 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி மணியகாரன்பாளையம் 89.77 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி குப்பக்கோணாம்புதூர் 88.24 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி வரதராஜபுரம் 87.50 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வடகோவை 85.37 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி இரத்தினபுரி 83.85 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி இருபாலர் மேல்நிலைப்பள்ளி இராமநாதபுரம் 81.82 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி பா.கமலநாதன் நினைவு மேல்நிலைப்பள்ளி, வெங்கிட்டாபுரம் 79.45 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி சித்தாபுதூர் 73.81 தேர்ச்சி சதவிகிதமும், மாநகராட்சி காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளி, இர.ச.புரம் 71.43 தேர்ச்சி சதவிகிதமும் என மொத்த்தம் 16 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 11 உயர்நிலைப் பள்ளிகளின் தேர்ச்சி சதவிகிதம் 92.71 ஆகும்.

மேலும் பாடப் பிரிவுகளில் கணக்கில் 13 மாணவ, மாணவியர்களும், அறிவியலில் 21 மாணவ, மாணவியர்களும், சமூக அறிவியலில் 95 மாணவ, மாணவியர்களும் ஆகமொத்தம் 129 மாணவ, மாணவியர்கள் 100 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டு மார்ச் 2016-ல் நடைபெற்ற பொதுத் தேர்வின் பாடப் பிரிவுகளில் 41 மாணவ, மாணவியர்கள் 100 மதிப்பெண்களுக்கு 100 மதிப்பெண்கள் பெற்றனர். மேலும், மாநகராட்சிப் பள்ளிகளில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இம்மாணவ, மாணவியர்களை ஊக்குவித்து, வழிநடத்திய பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

Newsletter

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...

கோவையில் கற்பகம் பார்மசி கல்லூரியில் 325 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் கற்பகம் பார்மசி கல்லூரியின் பட்டமளிப்பு விழா-2026 மே 2 ஆம் தேதி நடைபெற்றது. 242 பி.பார்ம், 6...