சிங்காநல்லூர் பேருந்துநிலையம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட டாஸ்மாக் கடையை அடைத்து நொறுக்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர்

கோவை மாவட்டம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசிதிபெற்றதும், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இங்கு அன்றாடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் மட்டும் வெளியூர் மக்கள் வந்து செல்வர். 



இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி உத்தரவிட்டது. இதில், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தின் அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையும் அடங்கும். 



அதன்படி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இருப்பினும், அந்த டாஸ்மாக் கடையில் கள்ளத்தனமாக தினமும் மது விற்பனை தொடர்ந்துகொண்டே வந்தது. 



இதுகுறித்து நடவடிக்கை எடுத்து சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் பல முறை புகார் அளித்து வந்தனர். எனினும் அரசு அலுவலர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்வதில் மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்றிணைந்து இன்று காலை 11.30 மணியளவில் சிங்காநல்லூர் டாஸ்மாக் கடையினையும் அங்கிருந்த மதுபாட்டில்களையும் அடித்து நொறுக்கினர்.



இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரக்குழு உறுப்பினர் கனகராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், சிங்காநல்லூர் காவல்நிலையத்தின் அருகிலேயே இந்த டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. தமிழக காவல்துறை டாஸ்மாக் கடைகளுக்கு அரணாக செயல்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு, டாஸ்மாக் கடை நிர்வாகத்தை தன்னிச்சையாக செயல்பட அனுமதித்ததே இதற்குக் காரணம். இந்த கடை நடத்த இடமளித்த கட்டிட உரிமையாளர் மீதும், டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அவர்களை கைது செய்ய வேண்டும் என கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...