கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடங்கியது. SNR Sons Charitable Trust இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். 22 கல்லூரிகளைச் சேர்ந்த 600 மாணவர்கள் கொண்ட 23 அணிகள் இரண்டு பிரிவுகளில் (1 kW-9 அணிகள், 2 kW-14 அணிகள்) நான்கு நாட்கள் போட்டியிடுகின்றனர். Grow iTech மற்றும் Schematic Industrial Solutions நிறுவனங்களுடன் SRIT இயந்திரப் பொறியியல் துறை தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.


Coimbatore: கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) Electric Bike Design Challenge (EBDC) 6.0 நிகழ்ச்சி இன்று (செப். 22) காலை 10.30 மணிக்குத் தொடங்கியது. 22 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் கொண்ட 23 அணிகள் நான்கு நாட்கள் நடைபெறும் இந்த மின்சார வாகன வடிவமைப்பு சவலில் பங்கேற்கின்றன.

நிகழ்ச்சியில் SNR Sons Charitable Trust, கோவை, இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். SRIT-ன் முதல்வர் Dr J டேவிட் ரத்னராஜ், இயந்திரப் பொறியியல் துறைத் தலைவர் Dr P T சரவணகுமார், மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறைத் தலைவர் Dr S. சங்கீதா, பேராசிரியர்கள், மாணவர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.



Grow iTech, Schematic Industrial Solutions, பெங்களூரு, மற்றும் SRIT இயந்திரப் பொறியியல் துறை ஆகியவற்றுக்கு இடையே தொழில்துறை-கல்வித்துறை ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம், மாணவர்களுக்கான தொழில்துறைப் பயிற்சி, திறன் மேம்பாடு, நடைமுறைப் பயிற்சி, தொழில்துறை சார்ந்த திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த வளர்ச்சி வாய்ப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சி SRIT-யில் நிர்வாகக் குழு அறையில் காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதில் Grow iTech நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சிவா கணேஷ் வெள்ளிங்கிரி, Schematic Industrial Solutions நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் பிரியா பிரகாஷ், கல்லூரியின் முதல்வர் Dr J டேவிட் ரத்னராஜ் மற்றும் இயந்திரப் பொறியியல் துறைத் தலைவர் Dr P T. சரவணகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

EBDC 6.0 நான்கு நாட்கள் நடைபெறும் மின்சார வாகன இயக்கம் மற்றும் பொறியியல் புதுமை சார்ந்த நிகழ்வாகும். மாணவர்கள் தங்களது தொழில்நுட்ப அறிவு, படைப்பாற்றல் மற்றும் நடைமுறைத் திறன்களை மின்சார வாகன வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டில் வெளிப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆறாவது பதிப்பில் 22 கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். மொத்தம் 23 அணிகள் இரண்டு பிரிவுகளில் போட்டியிடுகின்றன. இதில் 1 kW பிரிவில் 9 அணிகளும், 2 kW பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றுள்ளன.

நான்கு நாட்கள் நடைபெறும் இந்நிகழ்வில் மின்சார வாகன வடிவமைப்பு, தயாரிப்பு, செயல்திறன், பாதுகாப்பு, புதுமை மற்றும் நிலையான போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களில் சவால்கள் மற்றும் மதிப்பீடுகள் நடைபெறுகின்றன.

இந்நிகழ்வு மாணவர்கள் தங்களது பொறியியல் கோட்பாடுகளை நிஜ உலக மின்சார வாகனத் தொழில்நுட்ப சவால்களுடன் இணைத்து, நேரடி செயல்முறை அனுபவத்தைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

Newsletter

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...

பீளமேடு பள்ளியில் காலை உணவுத் திட்டம் தொடக்கம்; நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் செப்டம்பர் 22, 2026 அன்று நான்கு முக்கிய பணிகள் நடைபெற்றன...

கோவை SRIT-ல் EBDC 6.0 மின்சார இருசக்கர வாகன வடிவமைப்பு சவால் தொடக்கம்

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் (SRIT) செப்டம்பர் 22ஆம் தேதி காலை 10.30 மணிக்கு EBDC 6.0 மின்சார இருசக்க...