கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் செப்டம்பர் 22, 2026 அன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையிலும், பொதுமக்களிடமிருந்து 86 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. பிறப்பு, இறப்பு சான்றிதழ், சாலை வசதி, மின்விளக்கு, குடிநீர், பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் ஆகிய பிரச்சினைகள் தொடர்பான மனுக்கள் இதில் அடங்கியிருந்தன. மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயர் அறிவுறுத்தினார்.
Coimbatore: கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 86 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாண்புமிகு மேயர் திருமதி.கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையிலும், மாநகராட்சி ஆணையாளர் திரு.கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., முன்னிலையிலும் இக்கூட்டம் இன்று (22.09.2026) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து, பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், சாலை வசதி, மின்விளக்குகள், குடிநீர் வசதி, பாதாள சாக்கடை, தொழில்வரி, சொத்துவரி, புதிய குடிநீர் இணைப்பு பெயர் மாற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 86 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாண்புமிகு மேயர் அவர்கள், இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில், மதிப்பிற்குரிய துணை மேயர் திரு.ரா.வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் திரு.த.குமரேசன், மாநகர தலைமைப் பொறியாளர் திரு.விஜயகுமார், நகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, நகரமைப்பு அலுவலர் திரு.தாமோதரன், மாநகர கல்வி அலுவலர் திரு.குணசேகரன்(பொ), உதவி ஆணையர்கள் திரு.பிரகாஷ்(நிர்வாகம்), திரு.தட்சிணாமூர்த்தி(கிழக்கு), திருமதி.நர்மதா(மேற்கு), திருமதி.மோகனசுந்தரி (வடக்கு), திரு.கணேசன் (மத்தியம்), திரு.மகேஷ்கனகராஜ் (வருவாய் மற்றும் தெற்கு(பொ), செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மாநகராட்சி அனைத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.