கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க.விக்னேஷ் திறந்து வைத்தார். மேலும் ரூ.26.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகளுக்கான பூமி பூஜையிலும் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சுந்தராபுரம் புதிய அங்கன்வாடி மையம், கல்லுக்குழி வீதி சுகாதார ஆய்வாளர் அலுவலகம், சாரதா மில் சாலையில் பயணியர் நிழற்குடை, போத்தனூரில் ஆழ்துளைக் கிணறு, கோணவாய்க்கால்பாளையத்திற்கு குழாய் நீர் விநியோகம், கணேசபுரத்தில் சிறுபாலம் ஆகியவை இதில் அடங்கும். மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் க.விக்னேஷ் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும் ரூ.26.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய பணிகளுக்கான பூமி பூஜையிலும் அவர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார்.



மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில், இன்று (16.09.2026) கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.



அமைச்சர் க.விக்னேஷ், கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம், வார்டு எண்.94-க்கு உட்பட்ட சுந்தராபுரம், பதிவாளர் காலனி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தினை திறந்து வைத்தார். அதே வார்டுக்கு உட்பட்ட கல்லுக்குழி வீதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டடத்தினையும் திறந்து வைத்து பார்வையிட்டார்.



அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரூ.26.90 இலட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பின்வரும் பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு, பணிகளை துவக்கி வைத்தார்:

வார்டு எண்.96-க்குட்பட்ட சாரதா மில் சாலை, சங்கம் வீதி பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.8.85 இலட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடை அமைப்பது; வார்டு எண்.99-க்குட்பட்ட போத்தனூர், அற்புதம் நகர் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.9.40 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளைக் கிணறு அமைப்பது; வார்டு எண்.85-க்குட்பட்ட கோணவாய்க்கால்பாளையம் பகுதிக்கு பிரதான குழாய் மூலம் கிணற்று நீர் விநியோகம் செய்வது; மற்றும் வார்டு எண்.100-க்குட்பட்ட கணேசபுரம் அம்மன் நகர் பகுதியில் (முத்து மாரியம்மன் கோயில் பின்புறம்) மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.8.65 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் கட்டுவது.



இந்நிகழ்ச்சியில், துணை மேயர் ர.வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் ரெ.தனலட்சுமி, உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், செயற்பொறியாளர் மதிஜாக்குலின் ஜாய் லதா, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், மாமன்ற உறுப்பினர்கள் குணசேகரன், கார்த்திகேயன், உதவி பொறியாளர்கள் நடராஜன், இந்திராகாந்தி, இளம் பொறியாளர் ஜெகதீஸ்வரி, சுகாதார ஆய்வாளர் பாலகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...