விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளை மீறும் FL2 பார்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாநகரில் செயல்படும் FL2 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் இன்று நடைபெற்றது. அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகளை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தவிர பிற நேரங்களில் மதுபான விற்பனையில் ஈடுபடக் கூடாது என்றும், மனமகிழ் மன்ற உறுப்பினர்கள் மற்றும் விருந்தினர்களின் வருகைப் பதிவேடுகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 18 வயதுக்குட்பட்டவர்களை மதுபானக் கூடங்களுக்குள் எந்தச் சூழ்நிலையிலும் அனுமதிக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது.



வருகை தரும் நபர்களின் அடையாள விவரங்கள், குறிப்பாக ஆதார் உள்ளிட்ட விவரங்களை விதிமுறைகளின்படி பதிவு செய்து பராமரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. மேலும், மதுபான இருப்பு, கொள்முதல், விற்பனை மற்றும் மீதமுள்ள இருப்பு குறித்த விவரங்களை ‘ஸ்டாக் ரெஜிஸ்டர்’ பதிவேட்டில் தொடர்ந்து பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ளும் ஆய்வின்போது தேவையான பதிவேடுகள் மற்றும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், பார்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. சந்தேகத்துக்கிடமான நபர்கள் அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து தகவல் கிடைத்தால் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.



மேலும், வெளிமாநில மதுபானங்கள் அல்லது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படும் மதுபானங்கள் இருப்பது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் FL2 பார்கள் உரிமம் வழங்கப்பட்டுள்ள அங்கீகரிக்கப்பட்ட வளாகத்தில் மட்டுமே செயல்பட வேண்டும்; வேறு இடங்களில் செயல்படக் கூடாது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலோ அல்லது பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலோ பார்கள் செயல்பட்டால், சம்பந்தப்பட்ட FL2 பார் மற்றும் மனமகிழ் மன்றத்தின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என காவல் ஆணையர் எச்சரித்தார்.

இன்று பீளமேடு–விளாங்குறிச்சி சாலையில் செயல்பட்டு வந்த FL2 பார் ஒன்று, அங்கு இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான புகார் மற்றும் பிற விதிமீறல்களைத் தொடர்ந்து சீல் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...