சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பிடித்தம் செய்ததாகக் குற்றம்சாட்டி, பிடித்தம் செய்யப்பட்ட ₹1,000 முதல் ₹3,000 வரையிலான தொகையைத் திரும்ப வழங்கக் கோரி தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை: கோவை:

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், எலக்ட்ரீசியன்கள், அலுவலக உதவியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள், சம்பளப் பிடித்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாரதியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் ரமேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த ஜூலை மாதம் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து ₹1,000 முதல் ₹3,000 வரை இ.எஸ்.ஐ., பி.எப். பங்களிப்புத் தொகை என்ற பெயரில் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து நிதி அலுவலரிடம் கேட்டபோது, இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகை மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டதாகவும், டேமேஜ் மற்றும் அபராதத் தொகை எதுவும் பிடித்தம் செய்யப்படவில்லை என்றும் விளக்கமளித்ததாகத் தெரிவித்தார்.



ஆனால், இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையைப் பொறுத்தவரை, அந்தந்த மாதத்துக்குரிய தொகையை மட்டுமே பிடித்தம் செய்ய வேண்டும்; மொத்தமாகப் பிடித்தம் செய்யக் கூடாது என்ற விதி உள்ளதாக அவர் கூறினார்.

அவ்வாறு தவறாகப் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தைத் திரும்ப வழங்கக் கோரி, கடந்த ஆகஸ்ட் 11 அன்று நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் பதிவாளரிடம் முறையிட்டதாகவும், அப்போது பிடித்தம் செய்யப்பட்ட தொகையைத் திரும்ப வழங்குவதாகவும், இனி சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாது என்றும் உறுதி அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். ஆனால், இதுவரை பிடித்தம் செய்யப்பட்ட தொகை திருப்பி வழங்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.



மேலும், மாவட்ட ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும், இரண்டு ஆண்டுகளுக்கான பொங்கல் போனஸை வழங்க வேண்டும், இ.எஸ்.ஐ. மற்றும் பி.எப். பிடித்தத்தை முறையாக அமல்படுத்த வேண்டும், ஓட்டுநர்களுக்கான இரண்டு மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், பாங்க் ஆஃப் இந்தியா மூலம் தொழிலாளர்களுக்கு தனிநபர் கடன் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்துடன், 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும், தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட மொத்தம் 20 கோரிக்கைகளை முன்வைத்துள்ளதாகவும், அவை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்றும் ரமேஷ் குமார் தெரிவித்தார்.



குறிப்பாக, டெலிபோன் ஆபரேட்டர் மோகன்ராஜ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்த அவர், டெலிபோன் ஆபரேட்டராகப் பணியாற்றிய மோகன்ராஜ் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தற்போது தொழில்நுட்ப அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள மோகன்ராஜை உடனடியாக நிதி அலுவலகத்தில் இருந்து பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பதும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கையாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக முறையிட்டதால், தொழிலாளர் நலச் சங்க பொதுச் செயலாளரான தன்னை பணியிட மாற்றம் செய்துள்ளதாகவும், அதேபோல் சங்கத் தலைவர் சிந்தாமணியும் உரிய உத்தரவு கடிதம் வழங்கப்படாமல் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே, தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை 400-க்கும் மேற்பட்ட தொகுப்பூதியப் பணியாளர்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களின் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...