கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொழிலாளி, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததே விபத்துக்கு காரணம் என புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை சுந்தராபுரம் குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்-1 பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (56), சுந்தராபுரம் சிட்கோ காமராஜ் நகரில் இயங்கி வரும் சிக்மா இண்டஸ்ட்ரியல் என்ற தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஜூன் 25-ம் தேதி மதியம் குணசேகரன் வழக்கம்போல் நிறுவனத்தில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத நிலையில், எதிர்பாராத விதமாக சுமார் 15 அடி உயரத்தில் இருந்து அவர் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் குணசேகரனின் தலை, வலது கை மணிக்கட்டு மற்றும் விலா எலும்புகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள என்.ஆர்.பி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை கங்கா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

நீண்ட நாட்கள் சிகிச்சை பெற்ற பின்னர் வீடு திரும்பிய குணசேகரன், தொழிற்சாலை நிர்வாகம் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகளை வழங்காததே விபத்துக்கு காரணம் எனக் கூறி சுந்தராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரது புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்ட சூழ்நிலை மற்றும் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வசதிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Newsletter

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...

கோவையில் 15 அடி உயரத்தில் இருந்து தொழிலாளி தவறி விழுந்து காயம்; பாதுகாப்பு வசதிகள் குறித்து புகார்

கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்து பலத்த காயமடைந்த தொ...

Elderly Woman Killed in Truck Collision near Velandipalayam in Coimbatore

A 70-year-old woman was killed after the scooter she was travelling on with her daughter was hit by a heavy truck on Tha...

Break-In: 100 Kg of Silver Stolen from House in Coimbatore’s Oppanakara Street

A major burglary has been reported at the residence of an auditor on Oppanakara Street in Coimbatore, where unidentified...

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 7-ல் டாப்செட்கோ கடன் மேளா

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் கடன் மேளா செப்டம்பர் 7-ல் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற...

வீட்டின் முன் நிறுத்தியிருந்த ஸ்கூட்டர் திருட்டு: கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் சிசிடிவி ஆய்வு

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்கூட்டர் திருட்டுப்போன சம்பவத்தில், ரேஸ்கோர்ஸ்...