கோவையில் அடுத்தடுத்து சாலை விபத்துகள்: முதியவர் பலி; 4 பேர் படுகாயம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற நான்கு தனித்தனி சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்; நான்கு பேர் காயமடைந்தனர். துடியலூர், கணுவாய், வடவள்ளி மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் நடந்த விபத்துகள் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களில் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற சாலை விபத்துகளில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு சம்பவங்களில் விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டுநர்கள் நிற்காமல் தப்பியோடிய நிலையில், அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

அரசு பேருந்து மோதி முதியவர் பலி:

துடியலூர் வி.கே.எல். நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (64), தனது ஸ்கூட்டரில் மேட்டுப்பாளையம் மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். ஜி.என். மில்ஸ் பகுதியில் மார்ட்டின் ஓமியோபதி கல்லூரி அருகே சென்றபோது, அதே திசையில் வந்த அரசு விரைவு பேருந்து அவரது ஸ்கூட்டர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துக்குமாருக்கு தலையிலும் இடது காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகள் அளித்த புகாரின் பேரில் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பேருந்து ஓட்டுநர் சின்னராஜ் (38) மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சாலையைக் கடந்த முதியவர் மீது பைக் மோதல்:

ஆகஸ்ட் 31-ம் தேதி காலை வடமதுரை–கணுவாய் சாலை சந்திப்பு அருகே சாலையைக் கடக்க முயன்ற அய்யாசாமி (64) மீது அடையாளம் தெரியாத இருசக்கர வாகனம் மோதியது. இதில் இடுப்பில் பலத்த எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்துக்குப் பிறகு நிற்காமல் சென்ற இருசக்கர வாகன ஓட்டுநரை மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சி.சி.டி.வி. பதிவுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தேடி வருகின்றனர்.

வடவள்ளி – மகளுடன் சென்ற பெண் மீது கார் மோதல்:

ஆகஸ்ட் 29-ம் தேதி இரவு மருதமலை ரோட்டில் தனது 8 வயது மகளுடன் ஸ்கூட்டரில் சென்ற காயத்ரி (42) மீது நாவாவூர் பிரிவு அருகே அடையாளம் தெரியாத கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தாய், மகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு காயமடைந்தனர். காயத்ரிக்கு மார்பில் உள்காயமும், சிறுமிக்கு தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. விபத்துக்குப் பிறகு காரை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை சி.சி.டி.வி. காட்சிகளின் உதவியுடன் போலீசார் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் – சரக்கு வாகனம், பைக் நேருக்கு நேர் மோதல்:

ராமநாதபுரம் ஒலம்பஸ் 80 அடி சாலையில் நேற்று பைக்கில் சென்ற மதன்குமார் (21) மீது எதிரே வந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் மோதியது. இதில் அவரது வலது முழங்கால் மற்றும் பாதத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. முதலில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பின்னர் ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். விபத்து தொடர்பாக சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த சிவசக்தி (21) என்பவரிடம் கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து நடைபெறும் இந்த விசாரணைகளில் விபத்துகளுக்கான காரணம், வாகன ஓட்டுநர்களின் கவனக்குறைவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...

Road Accidents in Coimbatore: Elderly Man Killed; Four Seriously Injured

Four separate road accidents reported in Thudiyalur, Kavanuai, Vadavalli and Ramanathapuram areas of Coimbatore have lef...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வப...