கோவையில் கஞ்சா, குட்கா விற்பனைக்கு எதிராக போலீஸ் அதிரடி: 7 பேர் கைது; 25 கிலோ பறிமுதல்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை தொடர்பாக போலீசார் நடத்திய சோதனைகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கவுண்டம்பாளையம், துடியலூர், சிங்காநல்லூர், பீளமேடு, சரவணம்பட்டி, வடவள்ளி மற்றும் ரத்தினபுரி பகுதிகளில் நடைபெற்ற நடவடிக்கைகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாநகரில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்த போலீசார் மேற்கொண்ட தொடர் சோதனைகளில் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த நடவடிக்கைகளில் மொத்தம் சுமார் 25 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கவுண்டம்பாளையம்: நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி ரோடு பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் குறைந்த காலி மைதானத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில் பிரபு நகரைச் சேர்ந்த பாலமுருகன் என்ற ‘பொரிபாலன்’ (30) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து விற்பனைக்காக வைத்திருந்த 3.3 கிலோ கஞ்சா மற்றும் 10 ஜிப்-லாக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

துடியலூர்: மார்க்கெட் ரோடு அரசு மருத்துவமனை அருகே கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சுகந்தா பெஹரா (35) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1.6 கிலோ கஞ்சா, ரூ.1,800 ரொக்கம் மற்றும் 2 செல்போன்கள் கைப்பற்றப்பட்டன. கோவையில் தங்கி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அவர் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.

சிங்காநல்லூர்: நீலிக்கோணாம்பாளையம் 43-வது பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பொதுக்கழிவறை பகுதியில் கஞ்சா விற்பனை தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில், வி.ஆர்.புரம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஹரி என்ற ‘முட்டைகோஸ்’ (22) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, பீளமேடு தொட்டிபாளையம் பிரிவு ஆத்துக்குட்டை பகுதியில் பொதுக்கழிப்பிடம் எதிரே உள்ள திறந்தவெளி மைதானத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது. இதில் சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த மதன்குமார் (43) மற்றும் நீலம்பூரைச் சேர்ந்த சுரேஷ்குமார் (50) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 18 கிலோ ஹான்ஸ், 2.85 கிலோ விமல் பான் மசாலா மற்றும் 858 கிராம் ஸ்வாகத் என மொத்தம் 21.708 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சரவணம்பட்டி: சங்கனூர் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 525 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. ஹான்ஸ், கூல் லிப், விமல், ஸ்வாகத் மற்றும் வி-125 உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், கடை நடத்தி வந்த ஆரோக்கியசாமி (60) கைது செய்யப்பட்டார்.

வடவள்ளி: அஜ்ஜனூர் சந்திப்பு பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் நடைபெற்ற சோதனையில் 495 கிராம் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரியக்கண்ணன் (20) மற்றும் துண்டைய்யா (26) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

ரத்தினபுரி: அமரர் ஜீவானந்தம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் 180.52 கிராம் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கடை நடத்தி வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (33) கைது செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்யப்பட்ட பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களின் சட்டவிரோத விற்பனைக்கு எதிராக மாநகரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை செம்மொழிப் பூங்காவில் மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டல செம்மொழிப் பூங்காவில் மேயர் K. ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டு, ரோஜாத் தோட்டம்,...

Driving Licences, RCs to Go Digital: Coimbatore Contract Workers Seek Alternative Jobs in Transport Dept

Following Tamil Nadu’s announcement that driving licences and vehicle Registration Certificates (RCs) will be issued dig...

மசக்காளிபாளையம் செங்குட்டையில் குப்பை அகற்றி மரக்கன்றுகள் நடவு

கோவை மாநகராட்சி மசக்காளிபாளையம், செங்குட்டை பகுதியில் குப்பை அகற்றி பத்துவகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதை மாநகராட்...

Tree Saplings Turn Garbage-Dumping Spot into Green Zone in Masakkalipalayam

The Coimbatore Corporation has cleared accumulated garbage from a municipal site in Senguttai, Masakkalipalayam, and pla...

SUV Plunges into Pond Near Karumathampatti; Two Killed

Two persons from Tiruppur district died after the Bolero vehicle they were travelling in lost control and overturned int...

கோவை ரேஷன் கடைகளில் வெங்காய விற்பனையை ஆய்வு செய்த ஆட்சியர்

கோவையில் வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த நியாய விலைக்கடைகளில் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட...