கோவை, சிங்காநல்லூர் தொகுதி வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதியில் சுகாதார மையம், உப்பு நீர் குழாய் பழுது பார்ப்பு, தெருக்களில் குப்பை அகற்றும் பணிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார். பொதுமக்களுக்கு தொந்தரவில்லாமல் பணிகள் முடிக்க அறிவுறுத்தினார்.
Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் பல்வேறு மேம்பாட்டு மற்றும் தூய்மைப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கினார்.

பாரதி காலனி பகுதியில் இயங்கி வரும் கோயமுத்தூர் மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருக்க, பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டினை ஆய்வு செய்து, சேவைகள் திறம்பட வழங்கப்படுகின்றனவா எனக் கண்காணித்தார்.

ரங்கம்மாள் கோயில் வீதி பகுதியில் உப்பு நீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்று வருவதை நேரில் சென்று ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடித்து மாலைக்குள் உப்பு நீர் விநியோகம் செய்யுமாறு ஒப்பந்தக்காரருக்கு உத்தரவிட்டார்.
வைரவா லேஅவுட் பகுதியில் சாலையோரத்தில் குவிந்துள்ள குப்பைகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதை ஆய்வு செய்தார். பொதுமக்கள் இவ்விடத்தில் குப்பைகள் போடாமல் தடுப்பதற்கு பிளக்ஸ் வைக்குமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரியிடம் அறிவுறுத்தினார்.

டிஸ்பென்சரி சாலை பகுதியில் சாலையோரத்தில் உள்ள செடிகள், குப்பைகள், சாக்கடை மண்கள் சுத்தம் செய்யும் பணியை ஆய்வு செய்தார். தூய்மைப் பணியாளர்களிடம் சாலையோரத்தில் உள்ள செடிகள், குப்பைகள், சாக்கடை மண்கள் முழுமையாக சுத்தம் செய்யுமாறு வலியுறுத்தினார். இந்த ஆய்வில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடனிருந்தார்.
வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் தொடர்ந்து பல்வேறு மேம்பாட்டுப் பணிகளை நேரில் கண்காணித்து வருவது குறிப்பிடத்தக்கது.