நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் குறித்து மாநகராட்சி ஆணையர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


கோவை மாநகராட்சி பிரதான அலுவலகக் கூட்டரங்கில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தலைமையில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்த நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சி தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள 50 ஆயிரம் மக்கள் தொகைக்கு 1 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம் வீதம் 32 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 23 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நீங்கலாக 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்த நிர்வாக குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் 32 ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமான பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிட கட்டுமான பணிகள் ஒவ்வொரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களாக நடைபெற்று வரும் கட்டுமானங்கள் குறித்து ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், புதிதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதியில் உள்ள 9 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் 4 நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை சீரமைத்தல் மற்றும் 5 நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடம் கட்டுதல் பணிகள் போன்ற கட்டிட கட்டுமான பணிகளையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், சீரமைத்தல் மற்றும் புதிய கட்டிட கட்டுமானப் பணிகள் குறித்த வாராந்திர அறிக்கையை அனுப்புமாறு சம்பந்தப்பட்ட சுகாதார அலுவலர்கள் மற்றும் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்களின் கருத்துகளை கேட்டு அதற்கேற்றார்போல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மண்டலம் 1க்கு ஒரு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான அனுமதி கிடைக்கப் பெற்றதை அடுத்து 5 மண்டலத்திற்கு தலா 1 மையம் வீதம் தரம் உயர்த்த ரூ.15 லட்சம் முதற்கட்டமாக வரப்பெற்றுள்ளது. இந்த நிதியினை பயன்படுத்தி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான ஆயத்தப் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகர நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், அனைத்து மண்டல உதவி ஆணையாளர்கள், மண்டல சுகாதார அலுவலர்கள், ஆய்வாளர்கள், மாநகராட்சிப் பொறியாளர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...