கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறால் பரபரப்பு ஏற்பட்டது. நடுரோட்டில் ஒருவரையொருவர் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டதாக இரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Coimbatore: கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட முயன்றதாக கூறப்படும் விவகாரத்தில், இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தேவி ஸ்ரீ பூனாரியம்மன் கோவில் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில், தங்களுக்கு சொந்தமாக கோவில் கட்ட வேண்டும் என்ற நோக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (54) மற்றும் காயத்ரி (40) ஆகிய இரு தரப்பினரும் மாநகராட்சி அனுமதியின்றி மணல் மற்றும் செங்கற்களை கொட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஒருவரையொருவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிக்கொண்டு, பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடுரோட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய சிறப்பு போலீஸ் ஏட்டு கிஷோர் குமார், இருவரையும் எச்சரித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார்.

இதுதொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, மாநகராட்சி இடத்தில் கட்டுமானப் பொருட்கள் கொட்டப்பட்டதற்கான காரணம் மற்றும் தகராறு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...