கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத நிலையை அடைவதை இலக்காகக் கொண்டு மாநகராட்சி தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதிகளில் சமூக நாய்களுக்கான வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று (22.08.2026) மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் சுமார் 700 சமூக நாய்களுக்கு Anti-Rabies Vaccination (ARV) செலுத்தப்பட்டுள்ளது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1,11,074 சமூக நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. நடப்பு மாதத்தில் இதுவரை சுமார் 8,000 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் மேற்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 36, 37, 38 ஆகிய பகுதிகளிலும், கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட வார்டுகளான 8 மற்றும் 54 ஆகிய பகுதிகளிலும் உள்ள சுமார் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச எண்ணிக்கையிலான சமூக நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தி, வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மேலும், வெறிநோய் தடுப்பு நடவடிக்கைகளுடன், விலங்குகளின் பிறப்பு கட்டுப்பாடு (ABC), தொடர்ச்சியான தடுப்பூசி பணிகள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகியவற்றையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதன் மூலம், "ஒருங்கிணைந்த நலன் One Health" என்ற அணுகுமுறையில் மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

எதிர்வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் வெறிநோய் இல்லாத நிலையை (Zero Rabies by 2030) அடைவதை இலக்காகக் கொண்டு, கோவை மாநகராட்சி தொடர்ந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...