ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு

கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு கல்லூரி வளாகத்திற்குத் திரும்பிய முன்னாள் மாணவிகள் பழைய நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ச்சியடைந்தனர். முன்னாள் மாணவிகள் சங்கம் தற்போது படிக்கும் மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கியது.


Coimbatore: கோவை ஆவாரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவிகள் சந்திப்பு நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு தாங்கள் கல்வி பயின்ற கல்லூரி வளாகத்திற்குத் திரும்பிய முன்னாள் மாணவிகள் தங்களது பழைய நினைவுகளை மீட்டெடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.




தங்களது கல்லூரிக் கால அனுபவங்கள், நண்பர்களுடனான இனிய நினைவுகள் மற்றும் ஆசிரியர்களுடனான பாசமிகு தருணங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தங்களுக்குக் கல்வியையும், வாழ்க்கைக்கான வழிகாட்டுதலையும் வழங்கிய கல்லூரி நாட்களைப் பூரிப்புடன் நினைவுபடுத்தி மகிழ்ந்தனர்.




முன்னாள் மாணவிகள் சங்கத்தின் சார்பில் தற்போது படிக்கும் மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கினர். முன்னாள் மாணவியர் அமைப்பின் செய்திமடல் வெளியிடப்பட்டது. எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் Dr. சுந்தர் ராமகிருஷ்ணன் முன்னாள் மாணவிகளின் சாதனைகளே கல்லூரியின் பெருமை எனக் குறிப்பிட்டு வாழ்த்தியதோடு தலைசிறந்த முன்னாள் மாணவிக்கான விருதையும் வழங்கினார்.




கல்லூரி முதல்வர் Dr. கி.சித்ரா மாணவிகளைச் சந்தித்து மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். கல்லூரி வாழ்வை நிறைவு செய்தாலும், கல்லூரியுடனான மாணவிகளின் உறவு என்றும் தொடரும் என்றும், தொடர்ந்து முன்னாள் மாணவிகள் கல்லூரியோடு இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.




நிகழ்ச்சியின் நிறைவில், முன்னாள் மாணவிகள் மீண்டும் ஒருமுறை பிரியாவிடை பெற்றனர். பல ஆண்டுகளைக் கடந்தும் மாறாத நட்பையும், உணர்வுப்பூர்வமான ஆசிரியர்கள்-மாணவிகளுக்கிடையிலான பிணைப்பையும் மீண்டும் உணரச் செய்த இந்தச் சந்திப்பு, அனைவரின் மனதிலும் நீங்காத நினைவாக அமைந்தது.


Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...