இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், காயமடைந்தவர் போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை: கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் பலத்த ரத்தக் காயங்களுடன் காணப்பட்ட நபர், தன்னை சிலர் தாக்கியதாக போலீசாரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து பேசிய நபர், அவர் தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்றும் கே.ஜி. மருத்துவமனைக்கு பின்புறம் உள்ள தெருப்பகுதியில் தங்கி கூலி மற்றும் சமையல் வேலை செய்து வந்ததாக தெரிவித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு பணி முடிந்து கோவை கே.ஜி. திரையரங்கம் முன்பு சாலையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அவரை ரயில்வே தண்டவாளம் பகுதி வரை துரத்திச் சென்று அச்சுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் ரயில்வே காவல்துறையினரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் அவரை சமாதானப்படுத்தி அமர வைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று காலையிலும் சிலர் தன்னைத் தாக்க வந்ததாகவும், அப்போது ஏற்பட்ட தாக்குதலில் தனது கையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாகவும் அருண்குமார் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரியிடம் தனது கையில் ஏற்பட்ட காயங்களை காண்பித்த அருண்குமார், நடந்த சம்பவம் குறித்து கண்ணீருடன் முறையிட்டார்.

இதனிடையே, காயமடைந்த அருண்குமார் போதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அருண்குமாரைத் தாக்கியதாகக் கூறப்படும் நபர்கள் யார், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...