கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர். பிஸ்டல் பிரிவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர்.


Coimbatore: சென்னை குருநானக் கல்லூரி பயிற்சி மையத்தில் கடந்த 27ஆம் தேதி தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் சிறப்பான வெற்றி பெற்று மொத்தம் 168 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.



10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் ஆகிய பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றன. தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்ட ரைபிள் கிளப்புகளில் இருந்து சுமார் 2000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.



கோயம்புத்தூர் ரைபிள் அசோசியேஷன் சார்பில் அசோசியேஷன் செயலாளரும் சீனியர் ஷூட்டருமான Venkatasalam தலைமையில் ரைபிள் பயிற்சியாளர் வழிகாட்டுதலின்படி சுமார் 25 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இவர்கள் 40 தங்கம், 18 வெள்ளி, 25 வெண்கலம் என மொத்தம் 83 பதக்கங்களை வென்றனர்.



அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பிஸ்டல் பிரிவிற்கான போட்டியில் பயிற்சியாளர் Arun தலைமையில் 23 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு 41 தங்கம், 28 வெள்ளி, 16 வெண்கலம் என 85 பதக்கங்களை வென்றனர்.



மேலும் பிஸ்டல் பிரிவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக கோவை பிஸ்டல் வீரர்கள் தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் இருந்து 60 வீரர்கள் தென் மாநில அளவிற்கான போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இவர்களுக்கான பாராட்டு விழா கோவை ரைபில் கிளப் மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவை ரைபில் கிளப் அசோசியேஷன் செயலாளரும், சர்வதேச ரைபில் பயிற்சியாளருமான Venkatasalam, அசோசியேஷன் துணை செயலாளர் Aparna Vasanth Kumar, அசோசியேஷன் பொருளாளர் Manivanan உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டு பதக்கங்களை வென்ற வீரர்களையும் பயிற்சியாளர்கள் Arun மற்றும் Prem Sai ஆகியோரை பாராட்டினர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...