மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை காணிக்கையாக கிடைத்தது. கோனியம்மன் கோயில் உண்டியல் திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.


Coimbatore: முருகனின் ஏழாம் படை வீடாக போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் புதன்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையாக மொத்தம் ரூ.76.25 லட்சம் வசூலானது.

கோயில் நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, நிரந்தர உண்டியலில் ரூ.72.37 லட்சம், காசோலை உண்டியலில் ரூ.2.32 லட்சம், திருப்பணி உண்டியலில் ரூ.1.55 லட்சம் என மொத்தம் ரூ.76.25 லட்சம் காணிக்கையாக கிடைத்தது.

இதனுடன், 50.500 கிராம் தங்கம், 2.40 கிலோ வெள்ளி மற்றும் 35.600 கிலோ பித்தளை ஆகியவையும் பக்தர்களின் காணிக்கையாக பெறப்பட்டன.

உண்டியல் எண்ணும் பணியை கோயில் தக்கார் ஜெயக்குமார், இணை ஆணையர்கள் விமலா மற்றும் சாமிநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு கண்காணித்தனர்.

சமீபத்தில் கோவை கோனியம்மன் கோயிலில் உண்டியல் எண்ணிக்கையின்போது நடைபெற்ற திருட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, மருதமலை கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட தன்னார்வலர்கள் அனைவரும் முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் தனி அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. மேலும், பணியின்போது காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...