கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழாவும் நடைபெற்றன. மருத்துவக்கல்வி அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு நினைவுச் சுவரைத் திறந்து வைத்தார். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனை, மேற்குத் தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் முன்னணி மையமாகத் திகழ்ந்து வருகிறது. கல்லீரல், சிறுநீரகம், இருதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்குத் தேவையான நவீன வசதிகளும், திறமையான மருத்துவக் குழுவும் இங்கு உள்ளன. உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தைப் போற்றும் வகையில், மருத்துவமனை "லைஃப் ஆப்டர் லைஃப் 2026" என்ற பாராட்டு விழாவை ஆகஸ்ட் 2, 2026 அன்று தனது மருத்துவமனை வளாக அரங்கத்தில் சிறப்பாக நடத்தியது.

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் உலகளவில் கடைப்பிடிக்கப்படும் "உடல் உறுப்பு தானப் பாராட்டு வாரத்தின்" ஒரு பகுதியாக இந்நிகழ்வு நடைபெற்றது. துயரம் நிறைந்த கடினமான சூழலிலும் தங்கள் அன்புக்குரியவர்களின் உறுப்புகளைத் தானமாக அளித்த கொடையாளர்களின் குடும்பத்தினரை கௌரவிக்கும் விதமாக விழா அமைந்தது.

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் Dr K G Arunraj முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு, தானமளித்தோரை நினைவுகூரும் நினைவுச் சுவரைத் திறந்து வைத்தார். மேற்குத் தமிழகத்தில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து முதன்மை மையமாக விளங்கும் கேஎம்சிஹெச் மருத்துவமனையைப் பாராட்டிப் பேசினார்.

கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் Dr Nalla G Palanisamy தலைமையுரையில், "நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளித்த கொடையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினரின் தியாகத்திற்கும் தலைவணங்குவதில் கேஎம்சிஹெச் பெருமிதம் கொள்கிறது" என்று குறிப்பிட்டார்.

கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் Dr Arun Palanisamy, "துயரமான, சோதனையான காலகட்டத்திலும் துன்பப்படும் சகமனிதர்களின் துயர் துடைக்க நீளும் கரம் மனித மாண்பின் உச்சம்" என்று பாராட்டினார்.

முன்னதாக கேஎம்சிஹெச் மருத்துவ இயக்குனர் Dr A N Murugan வரவேற்புரையாற்றினார். நரம்பியல் நிபுணர் Dr P Bhaskar "கேஎம்சிஹெச்-ல் வாழ்வுக்குப் பின் வாழ்க்கை" என்ற தலைப்பில் உரையாற்றினார். தீவிர சிகிச்சை நிபுணர் Dr S Yuvaraj, 2025-2026 ஆண்டிற்கான உறுப்பு தான விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

மருத்துவர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் உறுப்பு தானம் அளித்த குடும்பத்தினர் என 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்வு, மரக்கன்று நடும் விழாவுடன் தொடங்கியது. மயக்கவியல் நிபுணர் Dr T Arun Kumar நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...