பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக லாரி ஓட்டுநர் மீது கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை: பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக நின்றிருந்த லாரியின் மீது கார் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை குரும்பபாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் (45), அவரது மனைவி பூரணி என்ற உமாமகேஸ்வரி (39), மகள்கள் நர்மதா (20), ஆர்த்தி (19) மற்றும் உறவினரான ராமன் ஆகியோர் காரில் பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் மேற்கொண்டிருந்தனர்.

நல்லாம்பள்ளி அருகே சென்றபோது, தேசிய நெடுஞ்சாலையின் மையத் தடுப்பில் (centre median) நடப்பட்டிருந்த செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்காக லாரி ஒன்று சாலையில் நின்றிருந்தது. அப்போது வேகமாக வந்த கார், லாரியின் பின்புறத்தில் பலத்த வேகத்தில் மோதியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் கார் முழுவதுமாக நொறுங்கி, அதில் பயணம் செய்த கனகராஜ், உமாமகேஸ்வரி, நர்மதா, ஆர்த்தி மற்றும் ராமன் ஆகிய ஐந்து பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோமங்கலம் காவல்துறையினர், மீட்புப் பணியில் ஈடுபட்டு, இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், லாரி ஓட்டுநரான வடமாநிலத்தைச் சேர்ந்த பரத் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் ஒரே விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...