வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கௌரவித்தார். குப்பை மேலாண்மையில் சிறப்பான செயல்பாட்டை பொதுமக்களும் ஆற்றினர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலத்தின் வார்டு எண் 36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் குப்பை மேலாண்மையில் சிறப்பான பணியாற்றிய தூய்மைப் பணியாளர்கள் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

மேற்கு மண்டல அலுவலகத்தில் இன்று (31.07.2026) நடைபெற்ற நிகழ்வில், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் பணிகளை மிக சிறப்பாக மேற்கொண்ட இரண்டு தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இரண்டு சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரித்து வருகின்றனர். இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, வடவள்ளி பகுதியில் இப்பணியை சிறப்பாக செய்த தூய்மைப் பணியாளர்கள் கலைமணி மற்றும் முருகம்மாள் ஆகியோருக்கு கேடயங்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.



இப்பணிகளை திறம்பட கண்காணித்த சுகாதார மேற்பார்வையாளர் முருகன்மற்றும் ஒப்பந்த சுகாதார மேற்பார்வையாளர் கனகராஜ்ஆகியோருக்கும் மாநகராட்சி ஆணையர் பாராட்டுதல்கள் வழங்கினார். மேலும், வார்டு எண் 36-க்குட்பட்ட வடவள்ளி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குப்பைகளை தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைத்ததற்காக அவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது, மேற்கு மண்டல தலைவர் கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, நகர் நல அலுவலர் மரு.சுபாஷ் காந்தி, உதவி ஆணையர் நர்மதா, மாமன்ற உறுப்பினர் குமுதம், உதவி செயற்பொறியாளர் மண்டல சவிதா, சுகாதார இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

குப்பை மேலாண்மையில் தரம் பிரித்தல் முறை மிக முக்கியமானது என்பதை வலியுறுத்திய மாநகராட்சி ஆணையர், இதுபோன்ற சிறப்பான பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளுமாறு அனைத்து தூய்மைப் பணியாளர்களையும் ஊக்குவித்தார். பொதுமக்களும் குப்பைகளை ஆதாரத்திலேயே தரம் பிரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தங்கள் பங்களிப்பை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...