கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்றும் குழாய் உடைப்பு பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்து, விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.


Coimbatore: சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு பாரதி காலனி பகுதியில் இயங்கி வருகின்ற மாநகராட்சி ஆரம்ப சுகாதார மையத்தை கவுன்சிலர் பார்வையிட்டார். அங்கு பொதுமக்கள் வருகை பதிவேடு மற்றும் குழந்தைகள் தடுப்பூசி பதிவேட்டை ஆய்வு செய்தார். இதில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உடனிருந்தனர்.

பீளமேடு V.K. சாலை சந்திப்பு பகுதியில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதைத் தடுக்க விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் பணி நடைபெற்றது. இந்த பணிகளை கவுன்சிலர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வார்டு மேற்பார்வையாளர் ஈஸ்வரி உடனிருந்தார்.



பீளமேடு நெல்லை ஸ்டோர் சந்து பகுதியில் பம்பிங் ஸ்டேஷன் அமைப்பதற்கான குழி தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை கவுன்சிலர் அம்பிகா தனபால் பார்வையிட்டு, பணியை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.

பீளமேடு இலைக் கடை சந்து பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் உடைப்பு சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதையும் கவுன்சிலர் ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பணியை விரைந்து முடிக்குமாறு ஒப்பந்ததாரரிடம் கூறினார்.



இந்த ஆய்வுப் பணிகள் மூலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் நடைபெறும் அனைத்து வளர்ச்சிப் பணிகளும் விரைவில் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...