கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.


கோவை: திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என்றும், கட்சி நிர்வாகம் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தைப் போல் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி, கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவின் மேற்கு மண்டல பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்தார். மேலும், திமுகவில் சாமானிய தொண்டர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும், கட்சியின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மேலும், கோவையில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்கா கட்டுமானப் பணிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது தொடர்பாக தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இன்னும் ஒரு வாரத்திற்குள் திமுகவைச் சேர்ந்த பல கவுன்சிலர்களும், கட்சி நிர்வாகிகளும் அக்கட்சியிலிருந்து விலக உள்ளதாகவும் பாபு தெரிவித்தார்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...