கோவையில் நடைபெறும் 17வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் கண்காட்சியில் 600 கோடிக்கு வர்த்தகம் நடைபெறும் - இண்டெக் தலைவர் சுந்தரம்

17-வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி வரும் ஜூன் 1ம் தேதி முதல் முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் கண்காட்சி தொடர்பாக இண்டெக் தலைவர் சுந்தரம் கூறும்போது, ஜூன் 1- ம் தேதி துவக்க விழாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா கலந்து கொண்டு துவக்கி வைக்க உள்ளார். வர்த்தகர்களுக்கான பார்வை நேரம் காலை 10 முதல் 2 மணி வரையும் பொதுமக்கள் மதியம் 2 மணி முதல் 6 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள்.

22000 ஆயிரம் சதுர அடி பரப்பில் அரங்குகள் அமைக்கபட்டு 536 நிறுவனங்கள் இக்கண்காட்சியில் பங்கேற்க உள்ளன. இதில், இந்தியா மட்டுமின்றி ஜப்பான், இத்தாலி, அமெரிக்கா, தைவான், சீனா, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் தொழில் துறையினர் இந்த சர்வதேச கண்காட்சியில் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 50,000 வர்த்தக பார்வையாளர்கள் இக்கண்காட்சிக்கு வருகைதருவர் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 375 கோடி வர்த்தகம் நடைபெற்றது. இந்த ஆண்டு 600 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கபடுகிறது.

இயந்திர உற்பத்தியில் ஜப்பான் மற்றும் ஜெர்மனி நாடுகள் முன்னிலையில் உள்ளன. அந்த நாடுகள் தற்போது இந்தியாவில் உள்ள பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து தொழிற்சாலைகளை இந்தியாவில் துவக்கி வருகிறது. இந்தியாவில் ரோபோட்டிக்ஸ் தயாரிப்பு அதிகரித்துள்ளது. பணமதிப்பிழப்பிற்கு பின் தற்போது தொழில்துறை வளர்ச்சி அடைந்துள்ளது.

மேலும் புதிய தொழில் துறையினர் 40 பேர் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சியில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு தனி அரங்கு ஒதிக்கீடு செய்யபட்டுள்ளது. தற்போது தொழில் துறையினர் தொழில் துவங்க மூப்பேரிபாலையம் பகுதியில் 240 ஏக்கர் பரப்பளவிலும், செட்டிபாளையம் பகுதியில் 150 ஏக்கர் அளவில் தொழிற்பேட்டையும் அமையவுள்ளது. இதில், 300 தொழிற்சாலைகள் துவங்கபட்டு 12000 பேர் வேலை வாய்ப்பு பெற்று பயனடைவார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொழிற்பேட்டைகள் துவங்கப்பட ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது" என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...