அப்போது இருந்து இப்போது வரை அப்படியே இருக்கும் புரூக்பாண்ட் மேம்பாலம்!

கோவை மாவட்டம் நஞ்சப்பா சாலை அடுத்து அமைந்துள்ள புரூக்பாண்ட் சாலை மேம்பாலமானது மிகவும் பிரசிதிபெற்ற போக்குவரத்து நெரிசல் நிறைந்த மேம்பாலமாகும். ஆர்.எஸ்.புரம், நஞ்சப்பா சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ராம்நகர், அவிநாசி சாலை, உக்கடம் பகுதியை இணைக்கும் இப்பாளத்தினை நாள்தோறும் ஆயிரக் கணக்காகோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் அவ்வப்போது பெய்துவரும் மழையின் காரணமாக புரூக்பாண்ட் பாலத்தின் கீழ் வழித்தடத்தில் மழை நீரும், சாக்கடை நீரும் தேங்கி வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்து வருகிறது.



இந்த வழித்தடத்தில் கார்களும், இருசக்கர வாகனங்களும் செல்லும் நிலையில், வாகனங்கள் வேகமாக செல்வதால் மழை நீருடன் கலந்த சாக்கடை நீர் வாகன ஓட்டிகள் மீது தெரிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.



இதனிடையே, இன்னும் ஒரு சில மாதங்களில் பருவ மழை பெய்யவுள்ளதால் புரூக்பாண்ட் மேம்பாலத்தின் கீழ் வழித்தடத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படும் என்கின்றனர் வாகன ஓட்டிகள்.

இதுகுறித்து அப்பகுதி வாகன ஓட்டுநர் ஒருவர் கூறுகையில், எனது சிறு வயது காலம் முதலே புரூக்பாண்ட் மேம்பாலத்தின் அவினாசி சாலை செல்லும் கீழ் வழித்தடத்தில் மழைக்காலங்களில் இந்த நிலையே நீடித்து வருகிறது. ஒரு சில நேரங்களில் வாகன ஓட்டிகளே மூழ்கிவிடும் அளவிற்கு மழை நீர் இங்கு தேங்கி நிற்கும். 



மாநகராட்சி ஊழியர்கள் ஒவ்வொரு முறை கனமழை பெய்யும்போது இயந்திரங்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி போக்குவரத்தை சீரமைப்பர். இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...