கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்பு கட்டடம் மாநகராட்சியால் இடிக்கப்பட்டு வருகிறது.


கோவை: ஆவாரம்பாளையத்தில் பொதுப் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டிருந்த OSR நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட மூன்று மாடி வணிகக் கட்டடத்தை, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மாநகராட்சி இடித்து அகற்றி வருகிறது.

கோவை மாநகராட்சியின் 48வது வார்டுக்குட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில், கடந்த 1971ஆம் ஆண்டு பாலாஜி நகர் என்ற பெயரில் 8 ஏக்கர் பரப்பளவில் லே-அவுட் உருவாக்கப்பட்டது. அப்போது, பொதுப் பயன்பாட்டிற்காக 64 சென்ட் பரப்பளவில் திறந்தவெளி ஒதுக்கீட்டு (OSR) நிலம் ஒதுக்கப்பட்டிருந்தது.

எனினும், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தாமோதரன் என்பவர் அந்த ஒதுக்கீட்டு நிலத்தில் 7 சென்ட் பரப்பளவை ஆக்கிரமித்து வணிகக் கட்டடம் கட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் அது சுமார் 11,000 சதுர அடி பரப்பளவில், மூன்று மாடிகளுடன் கூடிய வணிக வளாகமாக விரிவடைந்தது. அதில், 10 க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டதுடன், ஒரு பகுதியில் லாட்ஜும் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.



இதுகுறித்து தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கம் மற்றும் பாலாஜி நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளிக்கப்பட்டது. மாநகராட்சியும் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் கட்டடம் அகற்றப்படாததால், கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநகராட்சி வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கட்டடத்தை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து கட்டட உரிமையாளரின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், அந்த மனு கடந்த பிப்ரவரி மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நகரமைப்பு அலுவலர் தாமோதரன் மற்றும் உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த் பிரபாகர் தலைமையில் 40-க்கும் மேற்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்புடன், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கட்டடத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.



மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள OSR நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது சட்டப்படி தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மீட்கப்படும் நிலங்கள் பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பொதுப் பயன்பாட்டிற்காக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...