கோவையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக கருதப்பட்ட புகைப்படக் கலைஞர் வழக்கில் அதிர்ச்சி திருப்பம்; திட்டமிட்டு கொலை செய்ததாக 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன், ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக முதலில் கருதப்பட்ட நிலையில், அவரை திட்டமிட்டு கொலை செய்ததாகக் கூறி கரூரைச் சேர்ந்த இருவர் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் தடாகம் அருகே மடத்தூர் பகுதியைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பிரவீன் (24), கடந்த வாரம் புதிய போட்டோஷூட் ஆர்டர் வந்துள்ளதாகக் கூறிவிட்டு ஒட்டன்சத்திரத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

இதற்கிடையில், கிணத்துக்கடவு அருகே ஏ.பி.சி. தியேட்டர் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. போத்தனூர் ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவர் காணாமல் போன பிரவீன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, முதற்கட்டத்தில் இது ரயிலில் அடிபட்டு ஏற்பட்ட மரணமாகவே கருதப்பட்டது.

இந்நிலையில், வழக்கில் எதிர்பாராத திருப்பமாக கரூரைச் சேர்ந்த மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் இன்று கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், காதல் விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில், போட்டோஷூட் இருப்பதாகக் கூறி பிரவீனை ஒட்டன்சத்திரத்திற்கு வரவழைத்த அவர்கள், இரவு தங்க வைத்ததுடன் மதுபானம் அருந்தச் செய்ததாகவும், பின்னர் காரில் அழைத்துச் செல்லும் போது கயிற்றால் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக

கூறப்படுகிறது.

பின்னர், கொலையை ரயில் விபத்து அல்லது தற்கொலை போல் சித்தரிக்கும் நோக்கில், பிரவீனின் உடலை கிணத்துக்கடவு அருகே ரயில்வே தண்டவாளத்தில் வீசியதாகவும், அதன் பின்னர் அந்த வழியாக வந்த ரயில் உடலின் மீது ஏறிச் சென்றதால் உடல் சிதைந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

தடாகம் போலீசாரும், போத்தனூர் ரயில்வே போலீசாரும் வழக்கில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், நீதிமன்றத்தில் சரணடைந்த இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...