கோவை மாங்கரையில் குட்டிகளை அரவணைத்தபடி அணிவகுத்த காட்டு யானைகள்..!

தென்மேற்கு பருவமழையால் பசுமை திரும்பிய கோவை மாங்கரை வனப்பகுதியில், குட்டி யானைகளை பாதுகாப்பாக நடுவில் வைத்து அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.


கோவை: தென்மேற்கு பருவமழையால் மீண்டும் பசுமை போர்த்தியுள்ள கோவை மாவட்ட வனப்பகுதிகளில், காட்டு யானைகள் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளன. இந்நிலையில், மாங்கரை வனச்சரகத்தில் குட்டிகளுடன் அணிவகுத்துச் சென்ற 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாக நிலவிய கடும் கோடை வெப்பம் காரணமாக காடுகளுக்குள் உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், காட்டு யானைகள் அடிக்கடி வனப்பகுதிகளை விட்டு வெளியேறி, சுற்றுவட்டார கிராமங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் விளைவித்து வந்தன.

ஆனால், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள் மீண்டும் பசுமையடைந்துள்ளன. வனப்பகுதிகளில் நீர்நிலைகள் நிரம்பியதால், யானைகள் மீண்டும் தங்களது இயற்கை வாழ்விடங்களுக்குத் திரும்பி வருகின்றன.



இதன் ஒரு பகுதியாக, தமிழக–கேரள எல்லையில் உள்ள தடாகம் அருகேயுள்ள மாங்கரை வனச்சரகத்தில், 20-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று உலா வந்தது. கூட்டத்தில் இருந்த பெண் யானைகள், குட்டி யானைகளை தங்களுக்கு நடுவில் பாதுகாப்பாக வைத்தபடி ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்துச் சென்றன.

இந்த மனம் கவரும் காட்சியை அப்பகுதியில் இருந்த இயற்கை ஆர்வலர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இயற்கை சூழலில் குட்டி யானைகளை அரவணைத்தபடி ஒழுங்காக நகரும் யானைக் கூட்டத்தின் இந்த அரிய வீடியோ தற்போது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Newsletter

கோவையில் இருசக்கர வாகன திருட்டு, கத்தி முனையில் மிரட்டல்: மூவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இருசக்கர வாகன திருட்டு மற்றும் கத்தி முனையில் மிரட்டல் வழக...

கோவையில் மத்திய அரசு மானிய யூரியா பதுக்கல்: 7 பேர் மீது வழக்கு; வாகன ஓட்டுநர்கள் 2 பேர் கைது - குடோன்களுக்கு சீல்..!

கோவை மாவட்டத்தில் மத்திய அரசின் மானிய விலை வேப்ப எண்ணெய் தடவிய யூரியாவை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த விவகாரத்தில் 7...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை...

கோவை-சக்தி சாலையில் வாகன சோதனை; விதிமீறிய ஏர் ஹாரன், LED விளக்குகள் அகற்றம் - அபராதம் விதிப்பு

கோவை-சக்தி சாலையில் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் வகையில் விதிமுறைகளுக்கு புறம்பாக ஏர் ஹாரன்கள் மற்றும் உயர் ஒளித்திறன்...

கோயம்புத்தூரில் ரூ.12.28 கோடி மதிப்பீட்டில் உள்விளையாட்டு அரங்குகள் - ஆட்சித்தலைவர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இறகுபந்து, கபடி, கைப்பந்து உள்விளையாட்டு அரங்குகள் மற...

கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளிக்கு சூரிய சக்தியில் இயங்கும் நாப்கின் எரிப்பு இயந்திரம் வழங்கல்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் உருவாக்கிய சூரிய...