கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனில் பெட்ரோல் கொடுக்க முடியாது எனக் கூறிய பங்க் ஊழியரை தாக்கிய சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, நேற்று இரவு காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு விதிமுறைகளை காரணம் காட்டி பெட்ரோல் பங்க் ஊழியர் பிரகாஷ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னை அமைச்சர் சம்பத்குமார் உறவினர் எனக் கூறியபடி, ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் காயமடைந்த பிரகாஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் சம்பத்குமார் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எவ்வித சமரசமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.

பொதுமக்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்படுபவர்களுக்கு இந்த அரசு ஒருபோதும் துணை நிற்காது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், அராஜகத்தை ஒடுக்குவதிலும் அரசு எந்தவித சமரசமும் செய்யாது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...