கோவை பீளமேட்டில் ஜன்னல் வழியாக சாவி எடுத்து 30 பவுன் நகை கொள்ளை

கோவை பீளமேடு நேருநகரில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவில் இருந்த சாவியை எடுத்து பூட்டிய வீட்டிற்குள் நுழைந்து 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றுள்ளார். நள்ளிரவில் நடந்த இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: கோவை பீளமேடு நேருநகர் பகுதியில், பூட்டிய வீட்டின் கதவில் இருந்த சாவியை ஜன்னல் வழியாக எடுத்து வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், 30 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து பீளமேடு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




நேருநகரைச் சேர்ந்த குப்புசாமி (62), தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். வழக்கம்போல் பணியை முடித்து வீட்டிற்கு வந்த அவர், வீட்டின் உள்பக்க கதவை பூட்டிவிட்டு, சாவியை கதவிலேயே வைத்துவிட்டு உறங்கச் சென்றதாக கூறப்படுகிறது.




நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கதவின் அருகிலிருந்த ஜன்னல் வழியாக கையை நீட்டி சாவியை எடுத்து, அதன்மூலம் கதவை திறந்து உள்ளே சென்றதாக கூறப்படுகிறது. பின்னர், வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த சுமார் 30 பவுன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.




இன்று அதிகாலை எழுந்த வீட்டில் உள்ளவர்கள், பீரோ திறந்து கிடந்ததையும், நகைகள் திருடப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்து, பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் சேகரிக்கப்பட்டன.




முதற்கட்ட விசாரணையில், கதவில் இருந்த சாவியை பயன்படுத்தியே மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.


Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...