மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் இளம்பெண் குத்திக்கொலை - கணவர் வெறிச்செயல்


மேட்டுப்பாளையம், சங்கர் நகரில் வசிக்கும் ரவி என்பவரது மகன் உதயா (20). இவரது மனைவி ஆனந்தி (18). இருவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இதனிடையே, கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக ஆனந்தி வெள்ளிக்குப்பம் பாளையத்தில் உள்ள தனது தாயுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், இன்று ஆனந்தி தலைவலிக்கு சிகிச்சை பெற மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு 14 எண் கொண்ட பேருந்தில் மேட்டுப்பாளையம் வந்துகொண்டிருந்தார்.

அப்போது, தாலூகா அலுவலகம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்த போது உதயா தனது மனைவி ஆனந்தியை சமாதானம் செய்து சேர்ந்து வாழ அழைத்துள்ளார். இதற்கு ஆனந்தி மறுத்த நிலையில், ஆத்திரமடைந்த உதயா, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தியின் மார்பில் குத்திவிட்டு உதயா தப்பி ஓடியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ஆனந்தியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அனந்தி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர் தப்பி ஓடிய உதயாவை தேடிவருகின்றனர்.

மேட்டுப்பாளையத்தில் ஓடும் பேருந்தில் மனைவியை கணவன் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...