கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி அணைகளின் தற்போதைய நீர்மட்டம், நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்த விவரங்களை நீர்வளத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருவதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




ஆனைமலையை அடுத்துள்ள ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவு 120 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி 60.15 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 139 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 350 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.




பொள்ளாச்சியை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும். தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தொடர்ந்து நீர் வரத்து கிடைத்து வருகிறது. ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி 16.92 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 103 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 535 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.




வால்பாறையில் அமைந்துள்ள சோலையாறு அணையின் மொத்த கொள்ளளவு 160 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் நீர் வரத்தால் ஜூன் 24ஆம் தேதி நிலவரப்படி 66.94 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 384 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...