மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

Coimbatore:

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்த கும்பலை அப்பகுதி இளைஞர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மலுமிச்சம்பட்டி சிக்னல் பகுதியில் கடந்த சில நாட்களாக பெண்கள் பச்சிளம் குழந்தைகளை தூக்கிக்கொண்டு கடும் வெயில் மற்றும் மழையிலும் பொதுமக்களிடம் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த நேதாஜி நண்பர்கள் நற்பணி மன்ற இளைஞர்கள், குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்தவர்களை நேரில் மடக்கிப் பிடித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைகளை மாவட்ட குழந்தைகள் காக்கும் மையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.

மேலும், குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைத்ததாக கூறப்படும் பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டனர், அவர்களது பெற்றோர் யார் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்களில் பச்சிளம் குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுமக்கள் தகவல் அளித்த போதிலும், சம்பவ இடங்களுக்கு குழந்தைகள் நல அதிகாரிகள் தாமதமாக வருவதாக சில இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

எனவே, கோவையில் முக்கிய சிக்னல்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் காவல்துறை மற்றும் சமூக நலத்துறை இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, குழந்தைகளை பயன்படுத்தி பிச்சை எடுக்கும் கும்பல்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...