மின்தடை புகார்களுக்கு ‘மின்னகம்’ சேவையை பயன்படுத்த மின்வாரியம் அறிவுறுத்தல்

மின்தடை,!ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களை, 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை, ஜூன் 5: மின்தடை மற்றும் மின்விநியோகம் தொடர்பான புகார்களை பதிவு செய்ய பொதுமக்கள் ‘மின்னகம்’ (Minnagam) சேவையை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து கோவை மண்டல மின்வாரிய தலைமைப் பொறியாளர் (பொறுப்பு) சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பொதுமக்கள் தங்களின் மின்சாரம் தொடர்பான அனைத்து புகார்களையும், குறிப்பாக ஃபியூஸ் ஆஃப் கால் (FOC), மின்தடை, குறைந்த மின்னழுத்தம் மற்றும் பிற மின்விநியோக குறைபாடுகள் தொடர்பான புகார்களையும் 24 மணி நேரமும் செயல்படும் ‘மின்னகம்’ அழைப்பு மையத்தின் 94987 94987 என்ற எண்ணில் பதிவு செய்து பயன்பெறலாம்.

மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே மின்சாரம் தொடர்பான குறைகள் மற்றும் புகார்களை தெரிவிக்க பொதுமக்கள் ‘மின்னகம்’ சேவையை அதிகளவில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...