கோவையில் வட்டிப் பணத்தை வசூலிக்க சென்ற பைனான்சியர் கொலை: ராஜஸ்தான் நபர் கைது

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் அபுதாகிர் பாஷா கொலை செய்யப்பட்ட வழக்கில், வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கேட்டு மிரட்டியதால் கொலை செய்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நர்பத் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


கோவை: கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பைனான்சியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். வட்டிக்குப் பெற்ற பணத்தை திரும்பக் கேட்டு தொடர்ந்து மிரட்டியதால் கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பட்டு நூல்காரர் சந்து தெருவைச் சேர்ந்த பஷீரின் மகன் அபுதாகிர் பாஷா (38), தனது நண்பருடன் இணைந்து பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மேலும், ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். கடந்த மே 29-ஆம் தேதி மாலை வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததால், குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சிரியன் சர்ச் சாலையிலுள்ள சாக்கடைக் கால்வாயில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் அபுதாகிர் பாஷாவின் உடல் மீட்கப்பட்டது. உடல் மீது தீ வைத்ததற்கான அடையாளங்களும், வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களும் இருந்தன.



கொலையாளியைக் கண்டுபிடிக்க துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன. விசாரணையின் போது கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார், சம்பவத்தன்று அபுதாகிர் பாஷா தனது வீட்டருகே உள்ள மற்றொரு வீட்டுக்குள் சென்றதைக் கண்டறிந்தனர்.

இதையடுத்து அந்த வீட்டில் வசித்து வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நர்பத் சிங் (35) என்பவரை பிடித்து விசாரித்தபோது, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து அவரைக் கைது செய்த போலீசார், அபுதாகிர் பாஷாவிடம் இருந்து பறிக்கப்பட்ட தங்கச் சங்கிலியையும் மீட்டனர்.

போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், 2017 முதல் கோவையில் தங்கி செல்போன் மற்றும் உதிரிபாகங்கள் விற்பனை செய்து வருவதாகவும், 2023-ஆம் ஆண்டு அபுதாகிர் பாஷாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் நர்பத் சிங் தெரிவித்துள்ளார். தொழில் நெருக்கடியால் அவரிடம் வட்டிக்குப் பணம் பெற்றதாகவும், அதைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் அபுதாகிர் பாஷா தொடர்ந்து பணம் கேட்டு தகராறு செய்து மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.



சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வந்து பணம் கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில், வீட்டில் இருந்த கயிற்றால் கழுத்தை இறுக்கி அபுதாகிர் பாஷாவைக் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். பின்னர் உடலைச் சாக்குப் பையில் கட்டி வீட்டில் மறைத்து வைத்ததுடன், செல்போன்களைப் பொன்ராஜபுரம் பகுதியில் வீசி ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும் கூறியுள்ளார்.

மறுநாள் மாலை உடலை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று சிரியன் சர்ச் அருகே உள்ள கால்வாயில் வீசியதாகவும், சாக்கு மூட்டையில் தனது கடையின் பெயர் இருந்ததால் அடையாளம் தெரியாமல் இருக்க பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவரின் மோதிரத்தை அடகு வைத்து ரூ.68,000 பெற்றதாகவும், கடன் தொகையைத் திரும்பக் கேட்டதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாகவும் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.



இதையடுத்து, அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள ஆர். எஸ். புரம் காவல்துறை, நர்பத்

சிங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...