மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் திருவீதி உலாவுடன் கோலாகலமாக தொடங்கியது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பக்தர்கள் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வாகனங்களை மட்டுமே பயன்படுத்த ஏற்பாடு.


Coimbatore: வைகாசி விசாகத் திருவிழா உலகெங்கும் உள்ள முருகன் கோவில்களில் பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலிலும் விழா கோலாகலமாக தொடங்கியது.



வைகாசி விசாகத்தை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, கோ பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.



இதையடுத்து, ராஜ அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி மற்றும் தெய்வானையுடன் கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 9.30 மணி மற்றும் மதியம் 12.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழாவையொட்டி கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் மருதமலைக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர், பிஸ்கட் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும், அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு பேருந்து மற்றும் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மலைக்கோவிலுக்குச் செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு பக்தர்களின் சொந்த வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படாது. பக்தர்கள் அடிவாரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள வாகனங்கள் மூலம் மலைக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மாநகர காவல் துறை சார்பில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...