கோவையில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு - 3 தனிப்படைகள் அமைத்து காவல்துறை தீவிர தேடுதல்

கோவை கள்ளிக்கநாயக்கன்பாளையத்தில் இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில், சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெறுகிறது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அடுத்த கள்ளிக்கநாயக்கன்பாளையம் பகுதியில் கல்லூரி மாணவியின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதல் பிரச்சனை காரணமாக நடந்த இந்த தாக்குதலில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.




இதுதொடர்பாக பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் குற்ற எண் 84/2026-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.





காதல் பின்னணியும் குற்ற வரலாறும்




காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், கல்லூரியில் படிக்கும் இளம்பெண்ணுக்கு சென்னையைச் சேர்ந்த கார்த்தி என்கிற மாரியப்பன் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. இந்த பழக்கம் படிப்படியாக காதலாக மாறியதாக கூறப்படுகிறது.




பின்னர், கார்த்தியின் பின்னணியை விசாரித்தபோது, அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதும், கடந்த 2024-ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் குண்டாஸ் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பெண், கார்த்தியுடனான தொடர்பை முற்றிலுமாக துண்டித்துள்ளார்.





திட்டமிட்ட தாக்குதல்




இதனால் ஆத்திரமடைந்த கார்த்தி, தனது கூட்டாளிகளுடன் இருசக்கர வாகனங்களில் வந்து, எரியக்கூடிய திரவம் மற்றும் பெட்ரோல் நிரப்பப்பட்ட பீர் பாட்டில்களை வீட்டின் நுழைவாயிலை நோக்கி வீசி தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர். இந்த தாக்குதலில் வீட்டின் முன்புறத்தில் தீப்பற்றி எரிந்தது.




சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி விட்டு தப்பியோடும் காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன.





தீவிர தேடுதல் நடவடிக்கை




சம்பவம் தொடர்பாக கார்த்தி என்கிற மாரியப்பன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பியோடியவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...