வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இறந்தவரின் விவரங்களை பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது,


கோவை:

நேற்று மதியம் சுமார் 3.30 மணியளவில் வடகோவை ரயில் நிலையம் அருகே அசாம் மாநிலத்தில் இருந்து கோவை வழியாக கன்னியாகுமரி நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த வாலிபர் ஒருவர் திடீரென ரயிலில் இருந்து கீழே விழுந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், தண்டவாளத்தில் கடுமையாக காயமடைந்து கிடந்த வாலிபரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

போலீசார் நடத்திய ஆரம்ப விசாரணையில், உயிரிழந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அவரது பெயர், முழு முகவரி மற்றும் குடும்ப விவரங்கள் ஆகியவை இதுவரை தெரியவில்லை. அவர் கையில் பச்சைக் குத்து இருந்ததுடன், உடலில் ஊதா நிற டவுசர் மட்டும் அணிந்திருந்ததாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

அவரிடம் எந்தவித அடையாள ஆவணங்களும் இல்லை என்பதால் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அவர் எவ்வாறு ரயிலில் இருந்து தவறி விழுந்தார், தற்செயல் விபத்தா அல்லது வேறு காரணம் உள்ளதா என்பது குறித்து கோவை ஜங்ஷன் ரயில்வே போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைக்காக ரயிலில் பயணம் செய்த மற்ற பயணிகளிடமும் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...