கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் ஆய்வு செய்து, பணிகளை விரைவாகவும் தரமாகவும் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மொத்தம் ரூ.117.70 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுகின்றன.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார். பணிகளை விரைவாகவும், தரமாகவும் செய்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



வடக்கு மண்டலம் வார்டு எண் 29-க்குட்பட்ட கணபதி புதூர் முதல் வீதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.28.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. வி.என்.எஸ்.நகர் பகுதியில் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டும் பணியும் முன்னெடுக்கப்படுகிறது.



கொரத்தோட்டம் பகுதியில் மாநகராட்சி பொது நிதியின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் மற்றும் சிறுபாலம் திரும்ப கட்டும் பணி நடைபெறுகிறது. கணபதி கார்டன் பகுதியில் ரூ.40.00 இலட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் ஆய்வகம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முன்னெடுக்கப்படுகிறது.



வி.என்.எஸ்.நகர் முதல் சின்னசாமி நகர் வீதியிலும், வி.என்.எஸ்.நகர் இடையே கால்வாயின் குறுக்கேயும் ரூ.39.70 இலட்சம் மதிப்பீட்டில் பாலம் கட்டும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த அனைத்து பணிகளையும் மேயர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.



மேயர் ஆய்வின் போது, மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர். மொத்தம் ரூ.117.70 இலட்சம் மதிப்பீட்டில் இந்த வளர்ச்சி பணிகள் செயல்படுத்தப்படுகின்றன.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...